Thu 13 Aug 2009 |
Ramanusa Nootrandadhi - 2 |
|
இராமாநுச நூற்றந்தாதி - 2
கள்ளார்பொழில் தென்னரங்கன்* கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு* ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளோடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளியே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுண மொன்றையே சிந்தியா நின்றது; இப்படிப்பட்டதொரு பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபாகடாக்ஷமேயொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.
Last Updated ( Thursday, 13 August 2009 11:39 )
| ||||||||||||||||||||||||