இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்
சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும் நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம் வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.
| அறு சமயம் |
அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் |
| வெல்லும் |
கண்டித்தருளின |
| பரம |
ஆரியரான |
| இராமானுச |
எம்பெருமானாரே! |
| உனது அடி போதுக்கு |
தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே |
| தொண்டு செய்யும் |
வாசிக கைங்கர்யம் பண்ணுகிற |
| நல் அன்பர் |
பரம பக்தர்கள் |
| சொல்லின் தொகை கொண்டு |
சப்த ராசிகளைக் கொண்டு |
| ஏத்தும் |
துதிக்கிற |
| உன் நாமம் எல்லாம் |
தேவரீருடைய திருநாமங்களெல்லாம் |
| என்தன் நாவிலுள்ளே |
எனது நாவிலே |
அல்லும் பகலும்
|
அஹோராத்ரமும் |
| அமரும்படி |
பொருந்தியிருக்கும் படி |
| நல்கு |
க்ருபைசெய்தருள வேணும் |
| இதுவே என் விண்ணப்பம் |
இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம்.
|
[இம்மூன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றொரு தனியன் மேனாட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்;]
Last Updated ( Tuesday, 04 August 2009 11:48 )
|